தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » அதிவேக வீதியில் 1082 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அதிவேக வீதியில் 1082 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Written By paadumeen on Wednesday, February 1, 2012 | 8:51 AM

தெற்கு அதிவேக வீதி திறக்கப்பட்ட நாள் முதல் இது வரை 1082 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ப்பட்டுள்ளதாக அதிவேக வீதிப் போக்குவரத்து பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. பெரும்பாலான சாரதிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக அந்தப் பொலிஸ் பிரிவு குறிப்பிடுகின்றது. அதிக வேகத்துடன் வாகனம் செலுத்துதல் மற்றும் இடப்புறமாக வாகனத் தை செலுத்தாமை ஆகிய காரணங்களுக்காக சாரதிக ளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர நேற்றைய தினம் வரையான காலப்பகுதியில் தெற்கு அதிவேக வீதியில் 88 வாகன விபத்துக்கள் பதிவாகியு ள்ளதாக போக்குவரத்து பொலிஸ் பிரிவு கூறியுள்ளது. தெற்கு அதிவேக வீதி கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment