
மிஹிந்தலை, ரம்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 35 பேர் காய மடைந்துள்ளனர். இவர்களில் 25 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ள்ளதாக மிஹிந்தலை வைத்தியசாலை யின் வைத்திய அதிகாரி டொக்டர் பீ.பீ.பிரசன்ன தெரிவித்துள்ளார். மேலும் 10 பேர் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்று வெளியேறி யதாகவும் அவர் குறிப்பிடுகிறார். இன்று காலை 7.30 அளவில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் புரண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அநுராதபுரத்தில் நாளை ஆரம்பமாகவிருக்கும் தேசத்துக்கு மகுடம் கண்காட்சியில் ஒத்திகை ஒன்றுக்காக சென்றவர்களே இப்பஸ்ஸில் பயணம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment