
நாய்களுக்கு ஏற்றப்படும் நீர் வெறுப்பு நோய் தடுப்பூசிக ளுக்கு நிலவிய தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் சு மார் ஆறு இலட்சம் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டுள் ள தாக சுகாதார அமைச்சின்,மருத்துவ விநியோகப் பிரிவு பணிப்பாளர் டொக்டர் கமல் ஜயசிங்க கூறியள்ளார்.
நேற்று முன்தினம் 58 ஆயிரம் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டன. இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகள் இன்று மருத்துவ விநியோகப் பிரிவிடம் ஒப்படைக்கவு ள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கையால் இந்த வருடம் நீர் வெறுப்பு நோய் தடுப்பூசி தேவையின் 50 வீதத்தை பூர்த்தி செய்ய முடியுமென சுட்டிக்காட் டப் பட்டுள்ளது. இந்த நிலையில் நாய்களுக்கு ஏற்றப்படும் நீர் வெறுப்பு நோய் தடுப்பூசிகளுக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது என மருத்துவ விநியோகப் பிரிவு அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment