
மலையகப் பகுதிகளில் நிலவும் கடும் வரட்சியை பயன்படுத்தி சிலர் பற்றைக் காடுகளை எரியூட்டும் சட்டவிரோத நட வடிக் கையில் ஈடுபட்டுள்ளதாக பொலி ஸார் தெரிவிக்கின்றனர். இதேவேளை காசல்ரீ நீர்த்தேக்கத்தை அண்மித்த மஸ் கெலிய - நோர்வூட் பிரதான வீதியின் நிவ்வெலி பிரதேசத்தில் நேற்று மாலை பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் சுமார் இரண்டு ஏக்கர் பற்றைக்காடு தீக்கிரை யாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக் கின்றன.
இந்நிலையில் மலையகப்பகுதிகளில் தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியால் குடி நீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள் ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மலையகப் பகுதிகளில் போதியளவு மழை பெய்யாத நிலையில் நீர் நிலைகள் வற்றத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக ஹட்டன்,பொகவந்தலாவை,பத்தனை,கடுகஞ்சேனை ஆகிய பிரதே சங்களில் குடி நீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. பிரதேசத்தில் அவ்வப் போது குழாய் மூல நீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
0 comments:
Post a Comment