
பிரபல மலையாள நடிகை அனன்யா. இவர் தமிழில் நாடோடிகள் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.தனுஷ் ஜோடியாக சீடன் மற்றும் சமீபத்தில் ரிலீசான எங்கேயும் எப்போதும் படங் களிலும் நடித்துள்ளார். அனன்யாவுக்கும் ஆஞ்சநேயன் என்ப வருக்கும் கடந்த வாரம் திடீரென திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆஞ்சநேயன் கேரளாவில் தொழில் அதிபராக உள்ளார். பெரும் பணக்காரர். அனன்யா சூட்டிங்குகள் மற்றும் அவர் கலந்து கொள்ளும் பட விழாக்களில் ஆஞ்சநேயன் தவறாமல் பங்கேற்று காதலிப்பதாக வற்புறுத்தி வந்தார். ஒரு கட்டத்தில் அனன்யாவும் அவர் காதலை ஏற்றதால் திருமண நிச்சய தார்த்தம் நடந்தது. இந்த நிலையில் முதல் திருமணத்தை மறைத்து அனன் யாவை 2வது திருமணம் செய்து கொள்ள ஆஞ்சநேயன் முயற்சித்ததாக பர பரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஆஞ்சநேயன் மீது அனன்யாவின் தந்தை கேரளாவில் உள்ள பெரும்பாவூர் போலீசில் இது குறித்து புகாரும் அளித்துள்ளார் என்றும் தகவல்கள் வெளி யாகி உள்ன. புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

எனது மகள் அனன்யாவுக்கும் ஆஞ்ச நேயனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஆனால் ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்ற விவரம் இப்போது எங்களுக்கு தெரிய வந்துள்ளது. முதல் திருமணத்தை எங்களிடம் மறைத்து மோசடியாக அனன்யாவை 2 வது திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.
போலீசார் ஆஞ்சநேயன் வீட்டுக்கு சென்று அவரிடம் விசாரித்ததில் அப்போது ஏற்கனவே திருமணமான தை அவர் ஒப்புக்கொண்டார் என்றும் முதல் மனைவியை விவாகரத்து செய்ய கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் கூறியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த செய்தி யால் அனன்யா அதிர்ச்சியில் வீட்டில் முடங்கி கிடக்கிறாராம்.
0 comments:
Post a Comment