
காதலர் தினமான நேற்று புதுச்சேரி யில் காதல் ஜோடிக்கு கட்டாய திரு மணம் செய்து வைத்தனர் இந்து முன் னணியினர். புதுச்சேரி பாரதி பூங்கா வில் அமர்ந்திருந்த காதல் ஜோடி களை திருமணம் செய்து கொள்ளும் படி இந்து முன்னணியினர் அவர்களு டன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.
தாலிக் கயிறுடன் இந்து முன்னணியினர் வந்ததால் காதல் ஜோடிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அப்போது ஒரு காதல் ஜோடிக்கு கட்டாய திருமணம் செய்ய முயன்றனர்.இதற்கு காதலி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் காதலனோ இதுதான் சமயம் என்று நினைத்து காதலிக்கு தாலிக் கட்டினார். இது குறித்த புகாரின் பேரில் கட்டாயத் திருமணம் செய்து வைத்த இந்து முன்னணியினர் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
0 comments:
Post a Comment