தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » குடாநாட்டில் வாகன அனுமதிப்பத்திரம் வழங்குவதில் அலட்சியம்! மிரட்டப்படும் சாகன சாரதிகள்

குடாநாட்டில் வாகன அனுமதிப்பத்திரம் வழங்குவதில் அலட்சியம்! மிரட்டப்படும் சாகன சாரதிகள்

Written By paadumeen on Tuesday, February 14, 2012 | 10:07 PM

புதுவருடம் பிறந்து ஒன்றரை மாதங் களாகியுள்ள நிலையில் குடாநாட்டில் வாகனங்களுக்கான வரி அனுமதிப் பத்திரங்களைப் பெறுவதற்கு மணிக் கணக்கில் வயது வேறுபாடின்றி பிர தேச செயலகங்களில் மக்கள் காத்திரு க்கும் நிலை தொடர்வதாக தெரிவிக்க ப்படுகிறது. “டோக்கன்” வழங்கப் பட்டே வாகனவரி அனுமதிப்பத்திரம் வழங்கும் செயற்பாடுகள் இன்னமும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொது மக்கள் கவலை தெரிவிக் கின்றனர். 
இந்த வருடத்துக்கான வாகனவரி அனுமதிப்பத்திரத்தை மார்ச் 31ஆம் திகதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதுவரை வரி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ளாத வாகன உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் வடக்கு மாகாண பிரதம செயலாளர் பொலிஸாருக்கு அறிவித்த போதும் பொலிஸாரும் படையினரும் இந்த விடயத்தில் வாகன சாரதிகளை விதிகளில் மறித்து வாகன அனுமதிப்பத்திரம் கேட்டு மிரட்டு கின்றனர்.
இந்த நிலையில் வாகன உரிமையாளர்கள் வாகனங்களுக்கான வரி அனுமதி பத்திரத்தை கூடிய விரைவில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவலில் பிரதேச செயலகங்களில் பெருமளவு கூடுகின்றனர். ஆனால் பிரதேச செயல கங்களில் வாகன அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறையில் கடந்த காலங்களில் நடைபெற்றது போன்று மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வரி அனுமதிப்பத்திரம் பெற வருபவர்களுக்கு “டோக்கன்” வழங்கப்பட்டு (மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கை) மணிக்கணக்கில் காத்திருப்பின் பின்னரே ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வரி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப் படுகின்றன.  அந்தணர்கள் பூசகர்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப் படுவதாகக் கூறப்படுகிறது.
வாகன வரி அனுமதிப்பத்திரம் பெறக் காத்திருப்போருக்கான பொருத்தமான முறையை எற்படுத்தி மேலதிக ஆளணியைப் பயன்படுத்திக் குறைந்த நேரத்துக்குள்ளே அவற்றை வழங்க முடியாதா? என்று கேள்வியெழுப்புகின் றனர் பொதுமக்கள். வாகன வரி அனுமதிப்பத்திரம் வழங்கும் அதிகாரிகளே இது உங்களின் கவனத்திற்கு.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment