
லாகூர்-கராச்சி இடையிலான விமானத் தில்தான் இந்தக் கூத்து நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் லாகூரிலிருந்து கராச்சிக்கு வந்தபோதுதான் இப்படி நடந்துள்ளார் விமானி. விமானத்தின் அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டதால் 2 பயணி களை மட்டும் உட்கார வைக்க முடியவில்லை. இதையடுத்து என்ன செய்வது என்று யோசித்த விமானிக்கு வித்தியாசமான ஐடியா தோன்றி யுள்ளது. அந்த இரண்டு பேரையும் டொய்லெட்டில் அமர்ந்து வருமாறு கேட்டுக் கொண்டார். அவர்களும் சரி என்று கூறி உள்ளே போய் உட்கார்ந்து கொண்டனராம்.
இந்த செய்தியை ஜியோ டிவி வெளி யிட்டுள்ளது. படு நஷ்டத்தில் இயங்கி வரும் நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷ னல் ஏர்லைன்ஸ் நிறு வனத்தை நிமிர்த் தி உட்கார வைக்க பாகிஸ்தான் அரசு கடுமையாக முயன் று வருகிறது.
வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை அளிக்குமாறு விமான நிறு வனத்தை அது தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் டொய்லெட்டில் உட்கார வைத்து பயணிகளை அழைத்துச் சென்று வித்தியாசமாக சேவையாற் றியுள்ளது அந்த நிறுவனம்.
0 comments:
Post a Comment