தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » பேருந்து கட்டணங்களை குறைக்க தயார்!

பேருந்து கட்டணங்களை குறைக்க தயார்!

Written By paadumeen on Thursday, February 16, 2012 | 8:28 AM

போதுமான எரிபொருள் நிவாரணத்தை வழங்கினால் பேருந்து கட்டணங்களை குறைக்க தயாராக இருப்பதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் கெமுனுவிஜயரத்ன நேற்று இதனைத் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித் தார்.

சரியான பொறிமுறையின் கீழ் இந்த டீசல் நிவாரணத்தை வழங்க அரசாங்கம் முற்படு மாக இருந்தால் பயணக் கட்டணங்களை மீண்டும் சீர்திருத்த தாங்கள் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இது அரசாங்கத்துக்கு ஒரு நல்ல செய்தி என தெரிவித்த அவர் எனினும் இந்த பொறிமுறை சில அரசியல் லாபத்துக் காகவோ அல்லது தனிப்பட்டவர்களுக்காகவோ மேற்கொள்ளக் கூடாது என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை அரசாங்கம் எந்த விதமான பொறிமுறைகளும் இன்றி 20 சதவீத பேருந்து கட்டணத்தை அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment