சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 306 c-2 இலங்கைக் கிளையின் முதலாவது உதவி ஆளுனர் உட்பட்ட குழுவினர் அண்மையில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்தனர். இவ்விஜயத்தின் போது கல்முனை நகர லயன்ஸ் கழக த்தின் அனுசரனையுடன் பாண்டிருப்பு அகரம் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஊடகவியலாளர் எஸ்.துஷ் யந்தன் தலைமையில் நடைபெற்ற பலா மரக்கன்றுகள் வழங்கும் நிகழ் வில் கலந்து கொண்டு பொது மக்க ளுக்கு மரக்கன்றுகளை வழங்கி வைத்தனர்.
இவ்வைபவத்தில் ஆளுநர் லயன் காமினி எம்.ஜே.எப். ஆளுநர் சபையின் உதவிச் செயலாளர் லயன் அனில் சமரவிக்ரம எம்.ஜே.எப். உதவிப் பொருளா ளர் லயன் சிவகுரு சன்முகநாதன்இ பன்னிப்பிட்டிய மெட்றோ கழகத்தின் தலைவர் விக்கும் சூரியாராச்சிஇ கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் தலை வர் லயன் கே.பொன்னம்பலம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இவ்வைபவத்தினையடுத்து பெரிய நீலாவணை கிராமோதய சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மரக்கன்றுகள் வழங்கும் வைபவத்திலும் கலந்துகொ ண்டனர்.
(இன்ஷாப் முஹம்மட்)
0 comments:
Post a Comment