தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » தனியார் பஸ்களின் சேவைப் புறக்கணிப்பால் நாடு முழுவதும் பொதுமக்கள் பாதிப்பு!

தனியார் பஸ்களின் சேவைப் புறக்கணிப்பால் நாடு முழுவதும் பொதுமக்கள் பாதிப்பு!

Written By paadumeen on Monday, February 13, 2012 | 11:19 AM

இலங்கை தனியார் பஸ் உரிமையா ளர் சங்கம் நேற்றிரவு முதல் ஆரம் பித்த பணிப் பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப் படுகின்றது. நாட்டின் அநேகமான பகுதிகளில் தனியார் பஸ்கள் சேவையில் இருந்து விலகி யுள்ளமையால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக் கின்றனர். இதேவேளை இன்றைய தினம் தனியார் பஸ்கள் போக்குவரத்தில்  விலகியுள்ளதாகல் தூர பிரதேசங்களுக்கான பஸ் சேவைகள் தடைப்பட்டுள் ளதாக குணசிங்புர பஸ் தரிப்பிடத்தின் பிரதான கட்டுப்பாட்டாளர் தெரிவிக் கின்றார். இந்நிலையில், பணிப் பகிஷ்கரிப்பில் கலந்துகொள்ளாது சேவையில் ஈடுபட்ட ஐந்து தனியார் பஸ்கள் மீது  காலி மற்றும் மாத்தறை பிரதேசங்களி ல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதல் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் மாத்தறையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச் சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்கும் நோக்கில் பஸ் போக்கு வரத்துகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக தனியார் போக்கு வரத்து அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கு மாகாண தனியார் பஸ் சங்கங்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். அத்துடன் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் குறிப் பிடுகிறார். இதேவேளை பஸ் பணி பகிஷ்கரிப்பு காரணமாக பல பகுதிகளிலும் இருந்து கொழும்பு கோட்டைக்கு ஆறு அதிவேக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவிக்கின்றது. இதற்கமைய ராகமை, நீர்கொழும்பு, ஹோமாகம, வெயன்கொட களுத்துறை ஆகிய பகுதிகளில் இருந்து இந்த ரயில் சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment