
கொழும்பு 3 கொள்ளுப்பிட்டியிலுள்ள பிரிட்டிஷ் கவுன்ஸில் கல்விப்பிரிவின் வகுப்பறைக் கட்டிடமொன்றில் இன்று காலை தீ ஏற்பட்டதாகவும் தற்பொழுது இது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவத்தி ல் தெய்வாதீனமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இங்குள்ள மாணவர்கள் பாதுகாப்பாக வகுப்பறைகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மின்னொழு க்கே இதற்குக் காரணம் என ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வருகிறது.
0 comments:
Post a Comment