
இலங்கையின் 64 ஆவது சுதந்திர தினத் தை ஒட்டி பேலியகொடவில் அமைக்கப் பட்டுள்ள பாரிய பதாதையில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் படம் இடம்பெற வில்லை. இதேபோன்று களனி பிரதேசத் திலும் அமைக்கப்பட்டுள்ள பதாதைகள் எவற்றிலும் அமைச்சர் மேர்வின் படம் இடம்பெறவில்லை. இந்தப் பதாதைகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, மற்றும் களனி பிரதேச சபை ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் ஆகியோரின் படங்கள் மட்டுமே பொறிக் கப்பட்டிருந்தன. இதேவேளை, பேலிய கொட நகர பிரதேசத்தில் அமைக்கப்பட்டி ருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவம் தாங்கிய பதாகை இனந்தெரி யாத நபர்களால் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. இந்தப் பதாகையிலும் அமைச்சர் மேர்வினின் படம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்ததக்கது.
0 comments:
Post a Comment