கடந்த வாரம் குடாநாட்டுக்கு ஜனாதிப தி விஜயம் செய்து வைத்திய சாலைக் கட்டடத்தையும் நீச்சல் தடாகத்தையு ம் திறந்து வைத்துவிட்டுச் சென்றது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனா ல் இந்நிகழ்வில் வெளியில் வராத சில விடயங்களும் நிகழ்ந்திருக்கின்றன. இப்பொழுதுதான் மெல்ல இவை வெ ளியே கசியத் தொடங்கியிருக்கின் றன. நடந்தவை இவைதான்
ஜப்பானிய நிறுவனமொன்றினால் மா வட்டத்தின் நான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் மேற்கொள்ள ப்படும் போசாக்கு செயற்திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு வழங்கவென 200மோட்டார் சைக்கிள்களும். 300 இற்கும் மேற்பட்ட சைக்கிள்களும் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் தினத்தன்று சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட அழைப்பிதழில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்கள். கையளித்தலும் பிரசுரமாகி யிருந்தது. இதனால் இந்தத் திட்டத்தில் பணியாற்றும் அனைத்து உத்தியோக ஸ்தர்களும் தொண்டர்களும் காலையில் 8மணிக்கே வந்து மண்டபத்தில் தங்கியிருந்தனர் நிகழ்வில் ஜனாதிபதியின் உரை முடிந்ததும் ஆளுநரின் நன்றியுரை இடம்பெறாத நிலையில் கூட்டம் முடிவடைந்தது. இதனால் ஆவ லுடன் காத்திருந்த 500க்கும் மேற்பட்ட குடும்பநல உத்தியோகஸ்தர்க ளும் சுகாதாரத் தொண்டர்களும் சைக்கிள்களை பெற்றுக் கொள்ளாது ஏமாற்றத் துடன் வீடு திரும்பினர்;.

ஆனாலும் இவர்களுக்கான சைக்கிள் களும் மோட்டார் சைக்கிள்களும் சுகா தார திணைக்கள அதிகாரிகளால் கடந் த சில நாட்களிலே கையளிக்கப் பட்டி ருப்பதாகத் தெரியவருகிறது.
இதேவேளை இன்னொரு சம்பவமும் இங்கு நடந்திருக்கின்றது. சாவகச்சேரி வைத்தியசாலை விடுதி திறப்பு விழா வுக்கு கிராம அலுவலர்கள் மற்றும் அரச தரப்பு உள்ளுராட்சி சபைகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு அனுப்பப் படவில்லையென்ற விடயமும் இப்பொழுதுதான் கசியத் தொடங்கியிருக் கிறது.
ஜனாதிபதியின் வருகைக்காக வைத்தியசாலை வளாகத்துக்கு வந்த கிராம அலுவலர்கள் மற்றும் அரசதரப்பு உள்ளுராட்சி சபைகளின் பிரதிநிதிகளும் அழைப்பிதழ் இல்லாத காரணத்தால் பொது மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத் தில் இருக்கைகள் இல்லாத நிலையில் நிகழ்வுகளைப் பார்வையிட்டனர்.
பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு அனுப்பிய போதிலும் கிராம அலுவலர்கள் மற்றும் சாவகச்சேரி நகரசபை, பிரதேச சபை, ஆகிய வற்றின் உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பாதது திட்டமிட்ட செயலாக இருக்கலாம் என தாம் கருதுவதாக நகரசபை உறுப்பினர்கள் சிலர் எமக்குத் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment