தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » ஆஸி. அணியை அடித்து மண் கௌவ வைத்தது இந்தியா!

ஆஸி. அணியை அடித்து மண் கௌவ வைத்தது இந்தியா!

Written By paadumeen on Sunday, February 12, 2012 | 7:15 PM


இலங்கை இந்தியா மற்றும் அவுஸ்தி ரேலிய அணிகள் மோதும் முக்கோண ஒருநாள் தொடரின் இன்றைய போட் டியில் இந்திய அணி மிக அபாரமாக ஆடி அவுஸ்திரேலிய அணியை 4 விக் கெட்களால் வீழ்த்தியுள்ளது. 

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெ ன்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவு ஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறை வில் 8 விக்கெட்களை இழந்து 269 ஓட் டங் களைப் பெற்றது. 

இதில் டேவிட் ஹசி 72 ஓட்டங்களையும் பொரஸ்ட் 66 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் வினய்குமார் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 

பதிலுக்கு 270 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49.4 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 270 ஓட்டங்களைப் பெற்று வெற்றிலக்கை அடைந்தது. 

இதில் கம்பீர் 92 ஓட்டங்களையும் தோனி 44 ஓட்டங்களையும் ரெய்னா 38 ஓட்டங்களையும் சர்மா 33 ஓட்டங்களையும் பெற்றனர். 

அவுஸ்திரேலிய - அடிலெய்ட் மைதானத்தில் அவுஸ்திரேலிய அணியை இந்திய அணி முதல் முறையாக வீழ்த்தியுள்ளமை விசேட அம்சமாகும்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment