
நாட்டின் பல பகுதிகளிலும் இன்று பிற்பகல் அல்லது மாலை வேளை யில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவிய ல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இடி, மின்னல் தாக்கம் போன்ற அனர்த்தங்களைத் தவிர்ப்பது குறித்து பொது மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களத்தின் கடமைநேர நிபுணர் வலியுறுத்தியுள் ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. மன்னார் மற்றும் தென்பகுதி கடற்பகுதிகள் ஏனைய நாட்களை விடவும் சற் றுக் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment