
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று ஆகிய பிரதேச சபை களுக்கான தேர்தலை நடத்துவதற்காக புதிய வாக்களிப்பு நிலையங்களை இனங்காண தேர்த ல்கள் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய இந்த வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட வேண்டிய பிரதேசங்கள் தொடர் பாக விசேட ஆய்வொன்றும் ஆரம்பிக்கப் பட்டுள் ளது.
வடமாகாண பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் ஆகி யோரின் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்படு வதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க கூறியுள்ளார்.
இதன்போது வாக்களிப்பை நடத்துவதற்கான புதிய வாக்களிப்பு நிலையங்களை தெரிவு செய் வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து புதிதாக நிறுவப்படவுள்ள வாக்களிப்பு நிலையங்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது. ஏற்கனவே வாக்களிப்பு நடத்தப்பட்ட அநேகமான வாக்களிப்பு நிலையங்கள் யுத்த சூழலில் அழி வடைந்துள்ளதால் இத்தகைய ஆய்வொன்றை நடத்துவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment