
இலங்கையில் உள்ள அநேகமான பல்கலைக் கழகங்கள் சர்வதேச தரப்படுத்தலில் முன்னேற் றம் கண்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு, பேராதனை, ஜயவர்த்தனபுர மற்றும் களனி ஆகிய பல்கலைக்கழகங்கள் சர்வதேச தரப்படுத்தலுக்கமைய முக்கிய இடங்களை கைப்பற்றியுள்ளதாக அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன கூறியுள்ளார்.
இலங்கையின் பல்கலைக்கழகங்களை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தும் வகையில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளே இந்த முன்னேற்றத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப் படுகின்றது.
பல்கலைக்கழகங்களின் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் கடந்த வருடத்தில் மாத்திரம் 600 மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருந்ததாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சர்வதேச தரப்படுத்தலின் பிரகாரம் தெற்காசியாவின் அதி சிறந்த 100 பல்கலைக்கழகங்களுக்குள் இலங்கையின் நான்கு பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment