தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » டெங்கு தொற்றியவர்களை இனங்காண புதிய செயற்திட்டம்

டெங்கு தொற்றியவர்களை இனங்காண புதிய செயற்திட்டம்

Written By paadumeen on Tuesday, February 14, 2012 | 10:03 AM

டெங்கு தொற்றுக்குள்ளானவர்களை ஆரம்பத்தி லேயே இனங்காண்பதற்கான புதிய செயற்திட்டத் தினை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவையின் அனு மதி கிடைத்துள்ளது. 

இதற்காக ஐரோப்பிய ஒன்றியம் 17 கோடி ரூபா வை வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவி க்கின்றது. டெங்கு நோயாளர்களை ஆரம்பத்திலே யே இனங்காணல்> எந்தவொரு பிரதேசத்திலும் டெங்குக் காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படின் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தல் என்பன இதன்கீழ் முன் னெடுக்கப்படவுள்ளன. 

இது தொடர்பில் ஆராய்வதற்கு சிங்கப்பூர்> ஜேர்மன்> சுவிடன் மற்றும் அ மெரிக்க பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் நேற்றையதினம் நாட்டிற் கு வருகை தந்திருந்தனர். இவர்கள் இலங்கையில் தங்கியிருந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான சிபாரிசுகளை வழங்கவுள்ளனர். இந்த செயற்திட்டத்தின் முதற்கட்டமான> கொழும்பு மாநாகர சபைக் குட் பட்ட பகுதிகளில் டெங்குக் காய்ச்சல் அதிகம் பரவும் இடங்களிலும்> ஹோமாகம வைத்தியசாலையை அண்மித்த பகுதிகளிலும் கண்காணிப்பு நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட் டுள்ளது.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment