
இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் 25 இலங்கை மீனவர்களை விடுதலை செய்வதற்கு தமிழக அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தமிழக அரசு மற்றும் அதன் கண்காணிப்புக் குழு என்பன இணைந்து இந்தத் தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளதாக சென் னைக்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகரா லயம் குறிப்பிட்டது. இதற்கமைய குறித்த மீனவர் களை விடுதலை செய்யும் உத்தரவிற்கு, மத்திய அரசின் அனுமதியைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் அவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. தேவேந்திரமுனை, குடாவெல்ல மற்றும் நில்வல்ல ஆகிய பகுதிகளில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த மீனவர்களே இவ்வாறு விடுவிக்கப் பட வுள்ளனர். அத்துடன் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஐந்து படகு களும் விடுவிக்கப்படவுள்ளன. இதற்கமைய அடுத்த வாரத்துக்குள் குறித்த மீனவர் கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என சென்னைக்கான இலங்கை யின் பிரதி உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
0 comments:
Post a Comment