தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » அதிரடிப் படையினரின் மினி முகாம் மீது புலிகள் தாக்குதல் 03 படையினர் பலி, ஐவர் படுகாயம்.

அதிரடிப் படையினரின் மினி முகாம் மீது புலிகள் தாக்குதல் 03 படையினர் பலி, ஐவர் படுகாயம்.

Written By paadumeen on Monday, March 23, 2009 | 8:03 PM

செங்கலடி - பதுளை வீதியில் கோப்பாவெளிக்கும் புல்லுமலைக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருந்த விசேட அதிரடிப் படையினரின் மினி முகாம் மீது நேற்று நள்ளிரவு 12மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய அதிரடித்தாக்குதலில் 03 விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டதோடு, மேலும் 05 விசேட அதிரடிப்படையினர் படுகாய மடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். அம்முகாமில் இருந்த ஆயுதங்கள் பலவும் புலிகளால் கைப்பற்றப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டதாகவும், தாக்குதலையடுத்து இம்முகாம் தீப்பற்றி எரிந்ததாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் தாக்குதல் நடந்த வேளை முகாமில் இருந்த சுமார் 10 க்கும் மேற்பட்ட அதிரடிப்படையினர் குடிமனைகளுக்குள்ளும் பற்றைகளுக்குள்ளும் தப்பியோடி வந்து தஞ்சமடைந்திருந்ததாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment