 மன்னார் மூர்விதியிலுள்ள காட்டுப் பள்ளிவாசல் பிரதான வீதியில் இன்று மாலை 7 மணியளவில் 29 வயதான இளைஞரொருவர் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். இவ்வீதியால் சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்த போது எதிரில் வந்த ஆயுததாரிகளால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
 மன்னார் மூர்விதியிலுள்ள காட்டுப் பள்ளிவாசல் பிரதான வீதியில் இன்று மாலை 7 மணியளவில் 29 வயதான இளைஞரொருவர் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். இவ்வீதியால் சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்த போது எதிரில் வந்த ஆயுததாரிகளால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சுட்டுக் கொல்லப்பட்டவர் வெல்டிங் தொழில் செய்துவருபரான செல்வராசா கிங்ஸ்லி என தெரிவிக்கப்படுகின்றது. தலையில் கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் சுடப்பட்டு இறந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக்கொண்ட இவர் காட்டுப் பள்ளிவாசலின் பிரதான வீதியில் வசித்த வருபவரெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் சுடப்பட்டுக் கிடந்த இடத்துக்கு சுமார் 200 மீற்றர் தொலைவில் இராணுவக் காவலரண் ஒன்று உள்ளமை குறிப்பிடத்தக்கது. 
இதேவேளை இன்று காலை 7 மணியிலிருந்து 9 மணிவரை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இப்பிரதேசத்தில் கூட்டாக சுற்றிவளைப்புத் தேடுதலொன்றை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் பின்னரே இப்பிரதேசத்தில் இன்று மாலை இவ்விளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் மன்னார் பஸ்தரிப்பு நிலையத்தில் புதிய இராணுவக் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
 

 


0 comments:
Post a Comment