தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » கிழக்கு பல்கலைக்கழகத்தில் முல்லைத்தீவு மாணவி தற்கொலை!!

கிழக்கு பல்கலைக்கழகத்தில் முல்லைத்தீவு மாணவி தற்கொலை!!

Written By paadumeen on Sunday, March 22, 2009 | 1:46 PM

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றுவரும் முல்லைத் தீவு மாவட்டத்தை சேர்ந்த மாணவி யொருவர் இன்று காலை தன்னைத்தானே தீமூட்டி தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது. கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கலைப் பீடத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்று வரும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த ரவீந்திரன் சுதர்சனா (வயது 24) என்ற மாணவி காலை 9.30 மணியளவில் கிழக்குப் பல்கலைக்கழக பெண்கள் விடுதியின் குளியலறையில் மண்ணெண்ணெய் ஊற்றி தன்னைத்தானே தீமூட்டித் தற்கொலை செய்துள்ளார். இம்மாணவியின் அவலக் குரல்கேட்டு அங்கு விரைந்த சக மாணவர்கள் கதவை உடைந்து மாணவியை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் இவரது உயிர் பிரிந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment