டத்தில் அமைந்துள்ள கருணா குழு முகாம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளது. கருணா குழு முகாமாகவும், சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அலுவலகமாகவும் செயற்பட்டுவந்த இவ் அலுவலகத்தின் மீது நேற்று (19-03-2009) இரவு 11 மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அதிரடித்தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்கள். இத்தாக்குதலில் கருணா குழு ஆயுததாரி ஒருவர் கொல்லப்பட்டதோடு, ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டும், ஒரு தொலைத்தொடர்பு சாதனமும் தம்மால் கைப்பற்றப் பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழீழ விடுதலை புலிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதலில் கொல்லப்பட்ட சாமியன் என்கின்ற கருணா குழு ஆயுததாரி அப்பகுதியில் நடைபெற்ற பல கொள்ளைச் சம்பவங்களுக்கும், ஆட்கடத்தல் மற்றும் கப்பம் அறவிடல் போன்ற செயற்பாடுகளுக்கும் முன்னின்று செற்பட்டு வந்ததாகவும், அப்பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை இவர் பல வழிகளிலும் துன்புறுத்தி வந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கருணா குழு ஆயுததாரிகளின் முகாமாக செயற்பட்டு வந்த இடங்கள் எல்லாம் கருணா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொண்டு அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்ற கையோடு தற்போது ஆயுததாரிகளின் முகாமாக மட்டுமல்லாது, சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அலுலகமாகவும் செயற்பட்டு வருகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment