தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » மட்டக்களப்பில் படையினரால் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் அதிகளவிலான உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்ல தடை!

மட்டக்களப்பில் படையினரால் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் அதிகளவிலான உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்ல தடை!

Written By paadumeen on Wednesday, March 18, 2009 | 9:18 PM

மட்டக்களப்பு மாவட்டத்தில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து படையினர் கைப்பற்றிய பகுதிகளில் படையினர் நாளுக்கு நாள் புதிய புதிய கட்டுப்பாடுகளை மக்கள் மீது திணித்து வருவதாகவும் அதன் மூலமாக மக்கள் பல்வேறு இன்னல்களை அசௌகரியங்களை அனுபவித்து வருவதாகவும் தெரியவருகின்றது. இதன் ஒரு பகுதியாக மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியிலுள்ள கண்டியனாறு, தாத்தாமலை, உன்னிச்சை, மாவடிஓடை மற்றும் வாகரைப்பகுதியிலுள்ள மதுரங்குளம் குஞ்சங்குளம் போன்ற மிகவும் பின் தங்கிய பகுதிகளில் வாழும் மக்கள் ஓர் குறிப்பிட்ட அளவுக்கு மேல் உணவுப்பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்ற கட்டுப்பாட்டினை சிறிலங்கா படையினர் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
உதாரணமாக, ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருப்பார்களாயின் அவர்கள் ஒரு நாளைக்கு நான்கு சுண்டு அரிசியே வாங்கமுடியும். அதுபோல் பால்மா வகைகள் மற்றும் ரின்களில் அடைக்கப்பட்ட உணவு வகைகள் குளிர்பானங்கள் போன்றவற்றை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வாங்கவோ அல்லது அப்பகுதிக்கு கொண்டு செல்லவோ முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் வீட்டுத்தேவைக்கு அதிகமாக உணவுப்பொருட்களை வாங்கவோ அல்லது வீட்டில் சேகரித்து வைக்கவோ முடியாத நிலையில் அன்றாடம் கையில் கிடைக்கும் பணத்தை மீதப்படுத்தி அதிகமான உணவுப் பொருட்களை சேகரித்து வைக்க முடியாத நிலையில் அப்பகுதி மக்கள் மேலும் வறுமையில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்கையில், ஏற்கனவே அப்பகுதியில் மேய்ச்சல் தரைகளுக்கு கால்நடைகளை கொண்டு செல்வதில் கட்டுப்பாடுகளையும் படையினர் கொண்டுவந்துள்ளநிலையில் பல கால் நடைகள் காடுகளில் அநாதரவாக நடமாடுவதாகவும் இதனால் கால் நடை வளர்ப்பாளர்கள் பொருளாதார இழப்புக்களையும் சந்தித்துள்ளனர் என்றும் தெரியவருகின்றது.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment