மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி - பதுளை வீதியில் அமைந்துள்ள 78ஆம் மைல்கல் பகுதியில் அமைந்துள்ள விசேட அதிரடிப் படையினரின் மினிமுகாமில் இன்று (28-03-2009) மதியம் 12.30 மணியளவில் நேரக்கணிப்பு குண்டு ஒன்று வெடித்ததில் இரண்டு விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட, ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.இதேவேளை இன்று (28-03-2009) காலை 06.30 மணிக்கு அம்பாறை மாவட்டம் 16ஆம் கிராமத்தில் புலிகளின் பொறிவெடியில் சிக்கி இரு ஊர்காவல் படையினர் தங்கள் கால்களை இழந்துள்ளார்கள்.
மட்டக்களப்பு - பதுளை வீதியில் உறுகாமத்திற்கும் கித்துள் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருந்த வீதித்தடை முகாம் மீது நேற்று (27-03-2009) இரவு 10.45 மணியளவில் தமிழீழ விடுதலை புலிகள் தாக்குதல் ஒன்றை நடாத்தியுள்ளனர். இத்தாக்குதலின் போது ஒரு விசேட அதிரடிப்படை உறுப்பினர் கொல்லப்பட்டதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை முதல் அனைத்து செல்லிடத் தொலைபேசிகளின் வலையமைப்புக்களும் படையினரால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்ததுடன் இன்று மாலையே அவற்றின் சேவைகள் மீள வழங்கப்பட்டிருந்தன.



0 comments:
Post a Comment