தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » கொழும்பில் கப்பம் பெற முயன்ற கருணாகுழு உறுப்பினர்கள் இருவர் கைது!!

கொழும்பில் கப்பம் பெற முயன்ற கருணாகுழு உறுப்பினர்கள் இருவர் கைது!!

Written By paadumeen on Sunday, March 29, 2009 | 2:24 AM

கொழும்பில் கப்பம் பெற முயன்ற கருணாகுழு உறுப்பினர்கள் இருவர் இன்று காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதா வது.
கொழும்பு கொட்டாஞ்சேனையிலுள்ள வர்த்தகர் ஒருவரை தொலைபேசியில் மிரட்டி 50 லட்சம் ரூபாவை கப்பமாக தமது வங்கிக் கணக்கில் வைப்பிலிட வேண்டுமென்றும் இல்லை யெனில் அவரை குடும்பத்துடன் கொல்லப் போவதாக கருணாகுழுவைச் சேர்ந்த இருவர் மிரட்டியுள்ளனர்.
தனக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டலை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு தெரியப்படுத்திய வர்த்தகர் கருணாகுழு உறுப்பினர்கள் இருவரையும் தொடர்பு கொண்டு வங்கிக்கணக்கில் 50 லட்சம் ரூபாவை வைப்பிலிடும்போது தான் வருமானவரி சிக்கல்களுக்கு முகம்கொடுக்க நேரிடும் எனவும் பணத்தை நேரில் வந்து பெற்றுக் கொள்ளுமாறும் அதன்பின்னர் தன்னையும் தனது குடும்பத்தையும் தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
வர்த்தகரின் வேண்டுதலுக்கு இணங்கிய கருணாகுழு உறுப்பினர்கள் இருவரும் வர்த்தகர் கூறிய இடத்துக்கு வந்து பணத்தை வாங்கியபோது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுர சேனாநாயக்க தலைமையில் மறைந்திருந்த கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் இவ்விருவரையும் பணப்பையுடன் கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இருவரும் திருகோணமலையைச் சேர்ந்தவர்களென்றும் திருகோணமலையிலுள்ள கருணாகுழுவினருடைய முகாமில் பணிபுரிந்துவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து திருமலையிலுள்ள கருணா குழுவினருடன் தொடர்பினை ஏற்படுத்திய போது. மேற்படி நபர்கள் இருவரையும் தமது அமைப்பிலிருந்து தாம் விலக்கியிருந்ததாகவும் தமக்கும் அவர்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை எனவும் கருணாகுழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு அண்மையில் திருமலையில் கொலை செய்யப்பட்ட வர்ஷா கொலையுடனும் கொழும்பில் இதற்கு முன்னர் இடம்பெற்றுள்ள கப்பங்களிலும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் இவர்களது திருமலை விலாசங்களை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸ் குழு ஒன்று திருமலை சென்றுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment