தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » மக்கள் பாதிக்கக்கூடாது என்றுதான் போரின் வேகத்தை குறைத்துக் கொண்டார்களாம். -மகிந்த கூறுகிறார்.

மக்கள் பாதிக்கக்கூடாது என்றுதான் போரின் வேகத்தை குறைத்துக் கொண்டார்களாம். -மகிந்த கூறுகிறார்.

Written By paadumeen on Tuesday, March 31, 2009 | 1:41 PM

அப்பாவித் தமிழ் மக்களுக்கு உயிர்ச் சேதமோ பொருள் சேதமோ ஏற்படக் கூடாது என்பதற்காகவே போரின் வேகத்தை தற்பொழுது ராணுவம் குறைத்துக் கொண்டுள்ளதாக மகிந்த ராஜபக்ச கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில்தெரிவித்துள்ளார்.

என்ன செய்தாவது விடுதலைப் புலிகளை வீழ்த்திவிட வேண்டும் என்று தாங்கள் நினைக்கவில்லையாம். அதனால் தான் உணவு மற்றும் மருந்து விநியோகத்தை தடை செய்யவில்லையென்றும் அரசுக்கு எதிராக போராடிவரும் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் உணவு, மருந்து கிடைப்பதற்கு தமது நாடே அனுமதித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

சண்டையில் சிக்கி அப்பாவி மக்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் எனக் கணிப்பது மிகவும் கடினம் என்றும் விடுதலைப் புலிகள் அப்பாவி மக்களைப் போல் வேடமணிந்து ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்துவதால் இராணுவத்தினர் அதிகபட்ச கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு வருகின்றார்களாம். மேலும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் போரை நடத்திச் செல்வதால்தான் கடந்த சில வாரங்களாக போரின் வேகம் குறைந்துவிட்டதாகவும் அப்பாவி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் தாங்கள் மிகவும் கவனமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment