அங்கு அவர் மேலும் தெரிவிக் கையில் கிழக்கின் அபிவிருத்திக்கு நிதி வசதியில்லை யென்பது அப்பட்டமான பொய்யாகும். அதுபோன்று உதவிகள் வழங்கப்படுவதில்லையென்று கூறுவதும் தவறானது. வெளிநாட்டு உதவிகள் கூட கிடைக்கப்பெறுகின்றன. ஆனால் அவை பயன்படுத்தப்படுவதில்லை. கிழக்கு மீள் எழுச்சித் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு சதம் கூட செலவு செய்யப்படவில்லை. சமுர்த்தித் திட்டத்தின் கீழ் கடந்த வருடம் ஒதுக்கப்பட்ட நிதியில் நான்கு கோடி ரூபா செலவு செய்யப்படாத நிலையில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இலங்கையில் வாழும் தமிழ் சமூகம் தேசிய அந்தஸ்துள்ளவர்களாக மாறவேண்டும். தமிழ் மக்களிடையேயும் பல அரசியல் கட்சிகள் உள்ளன. அவை அனைத்தும் தனித்தனியான கொள்கையின் கீழ் செயற்படுகின்றன. சர்வகட்சிக் கூட்டத்தில் கூட தமிழ்க் கட்சிகள் தமது ஒற்றுமையை வெளிக்காட்டுவதில்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். அவர் தற்போது தமிழ் கற்பதில் அதிக அக்கறை செலுத்தி வருகிறார். கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் இப்போது பொலிஸ் அதிகாரம் கேட்கிறார். அந்த அதிகாரம் வழங்கப்பட்டால் அது சிங்கள மக்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும். இப்போது எமக்குத் தேவை அமைதியும் அபிவிருத்தியுமே என்று மகிந்தவால்தேசிய கட்டமைப்புக்கான ஒருமைப்பாட்டு அமைச்சராக பதவி வழங்கப்பட்டுள்ள கருணா தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment