 அரசாங்கம் தற்காலிகமான தாக்குதல் நிறுத்தமொன்றை இன்று அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம இதனைத்  தெரிவித்துள்ளார்.  வன்னியில் சிக்கியுள்ள மக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வருவதற்கும் அந்த மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதற்கும் இந்த தாக்குதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்கம் தற்காலிகமான தாக்குதல் நிறுத்தமொன்றை இன்று அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம இதனைத்  தெரிவித்துள்ளார்.  வன்னியில் சிக்கியுள்ள மக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வருவதற்கும் அந்த மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதற்கும் இந்த தாக்குதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். ஐ.நாவின் வெண்டுகோளுக்கு பதிலாக அரசாங்கம் இதனை அறிவித்திருந்தாலும் அது எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்று எதிர்காலத்தில் இடம்பெறும் விடையங்களை வைத்தே தீர்மானிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். எனினும் இத் தற்காலிக தாக்குதல் நிறுத்தம் உலகநாடுகளை திருப்திப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையென்றும் தொடர்ந்தும் உயர்பாதுகாப்பு வலயங்களிலுள்ள மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படலாம் எனவும் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
 

 


0 comments:
Post a Comment