தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விடுதியிலுள்ள 11 மாணவர்கள் இராணுவத்தினரால் கடத்தல்

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விடுதியிலுள்ள 11 மாணவர்கள் இராணுவத்தினரால் கடத்தல்

Written By paadumeen on Tuesday, April 7, 2009 | 7:50 AM

கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விடுதியிலுள்ள 11 மாணவர்கள் பலவந்தமாக் கடத்தப்பட்டு தெல்லிப் பளையில் உள்ள இராணுவத்தின் புனர்வாழ்வு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்குள் புகுந்த இராணுவத்தினர் அங்குள்ள விடுதிக்குச் சென்று அங்கிருந்த மாணவர்களை கடுமையாகத் தாக்கி பலாத்காரமாக தமது வாகனங்களில் கொண்டு சென்றுள்ளனர்.
ஊரெழு முகாம் இராணுவத்தினரே இவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதன்போது பலபக்கங்களிலும் மாணவர்கள்; சிதறி ஓடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கலாசாலை வளாகத்துக்குள்ளேயே ஆண்களுடையதும் பெண்களுடையதும் விடுதிகள் உள்ளதால். மாணவிகள் மிகுந்த அச்சத்திலும் பீதியிலும் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
தமது பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாத நிலையில் எவ்வாறு தொடர்ந்து தமது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதென கவலை தெரிவித்துள்ளனர்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment