 அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தலைமையில்  வடக்கு  கிழக்கில்  அரசாங்கம் தனியான இராணுவப் பிரிவொன்றை அமைத்துள்ளது என்றும் அதனூடாக அங்கு இராணுவ ஆட்சியொன்றைக் கொண்டு செல்லத்திட்டமிட்டுள்ளது என்றும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று மனோ கணேசன் எம்.பியுடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஹக்கீம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  அரசு இப்போது யுத்த வெற்றிகளை அடிப்படையாக வைத்துத்தான் நினைத்த அனைத்தையும் செய்கின்றது. அவ்வாறான ஒன்றுதான் இந்த மாகாணசபைத் தேர்தல்களும்.மக்களின் ஆணையை புறம்மொதுக்கி வைத்து விட்டு அரசு ஒருவகையான இராணுவ ஆட்சியை நடத்திக் கொண்டு வருகிறது. அண்மையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அவர்களின் ஆயுதங்களை  அரசிடம் கையளித்தது. இது எல்லோரையும் ஏமாற்றும் செயல். அவர்கள் ஆயுதங்கள் முழுவதையும் அரசிடம் ஒப்படைக்கவில்லை. சிறு எண்ணிக்கையை மாத்திரமே ஒப்படைத்தனர்.
அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தலைமையில்  வடக்கு  கிழக்கில்  அரசாங்கம் தனியான இராணுவப் பிரிவொன்றை அமைத்துள்ளது என்றும் அதனூடாக அங்கு இராணுவ ஆட்சியொன்றைக் கொண்டு செல்லத்திட்டமிட்டுள்ளது என்றும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று மனோ கணேசன் எம்.பியுடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஹக்கீம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  அரசு இப்போது யுத்த வெற்றிகளை அடிப்படையாக வைத்துத்தான் நினைத்த அனைத்தையும் செய்கின்றது. அவ்வாறான ஒன்றுதான் இந்த மாகாணசபைத் தேர்தல்களும்.மக்களின் ஆணையை புறம்மொதுக்கி வைத்து விட்டு அரசு ஒருவகையான இராணுவ ஆட்சியை நடத்திக் கொண்டு வருகிறது. அண்மையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அவர்களின் ஆயுதங்களை  அரசிடம் கையளித்தது. இது எல்லோரையும் ஏமாற்றும் செயல். அவர்கள் ஆயுதங்கள் முழுவதையும் அரசிடம் ஒப்படைக்கவில்லை. சிறு எண்ணிக்கையை மாத்திரமே ஒப்படைத்தனர்.அந்தச் சந்தர்ப்பத்தில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் எவரும் அங்கு இருக்கவில்லை. இந்த ஆயுத ஒப்படைப்பை எப்படி நம்புவது? இது ஒரு நாடகம். இந்நாட்டு மக்களையும் சர்வதேசத்தையும் முட்டாளாக்கும் செயல். கருணாவிடம் இருந்த ஆயுதங்கள் எங்கே? ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்று கூறப்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் தம்மிடமுள்ள ஆயுதங்களை ஒப்படைக்க முடியாது என்று அமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் கூறிவந்தார். இப்போது தன்னிடம்  ஆயுதங்கள் எவையும் இல்லை என்று கூறுகின்றார். அப்படியென்றால் தான் ஆயுதங்களை ஒப்படைக்க மாட்டேன் என்று கூறியபோது இருந்த ஆயுதங்கள் எங்கே?.அரசு கருணாவின் தலைமையில்  வடக்கு கிழக்கில் தனியான இராணுவ பிரிவு ஒன்றை  உருவாக்கியுள்ளது. அங்கு இராணுவ ஆட்சியை நடத்தவே திட்டமிட்டுள்ளது. கருணாவிடம் பல முகாம்களும், படைகளும் உள்ளமை அனைவருக்கும் தெரிந்த உண்மை. இந்த மாதிரியான நிலையில்தான் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை இன மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் எமக்குண்டு. இவ்வாறு தெரிவித்தார்.
 

 


0 comments:
Post a Comment