தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » யாழ் குடாநாட்டுக்கு இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை 4,800 ஆக அதிகரிப்பு

யாழ் குடாநாட்டுக்கு இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை 4,800 ஆக அதிகரிப்பு

Written By paadumeen on Saturday, April 4, 2009 | 10:36 AM

வன்னியிலிருந்து யாழ் குடாநாட்டுக்கு இடம்பெயர்ந்து வந்த மக்களின் எண்ணிக்கை 4,800 ஆக அதிரித்துள்ள தாக தென்மராட்சி பிரதேச செயலக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மிருசுவில் றோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலை, கொடிகாமம் நாவலடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை, கைதடி சித்த வைத்தியபீட மாணவர் விடுதி, கைதடி ஆதரவற்ற சிறுவர் இல்லம் யாழ்ப்பாணம் உயர்நீதிமன்ற முன்னைய கட்டிடம், கைதடி பனை ஆராய்ச்சி நிலைய வளாகம் ஆகிய நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இன்னும் புதிதாக இரண்டு நலன்புரி நிலையங்களை அமைக்க தென்மராட்சி பிரதேச சபை நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment