 படையினரின் வலிந்த கடல் மற்றும் தரை ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்றும் இன்றும் நடத்திய தாக்குதல்களில் 352 படையினர் கொல்லப்பட்டுள்ள துடன் 722 படையினர் காயமடைந்துள்ளனர். கடற் புலிகளின் முறியடிப்புத் தாக்குதல்களில் டோறா அதிவேகப் பீரங்கிப் படகும் இரண்டு அதிவேக நீருந்து விசைப்படகும் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
படையினரின் வலிந்த கடல் மற்றும் தரை ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்றும் இன்றும் நடத்திய தாக்குதல்களில் 352 படையினர் கொல்லப்பட்டுள்ள துடன் 722 படையினர் காயமடைந்துள்ளனர். கடற் புலிகளின் முறியடிப்புத் தாக்குதல்களில் டோறா அதிவேகப் பீரங்கிப் படகும் இரண்டு அதிவேக நீருந்து விசைப்படகும் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.நேற்று வியாழக்கிழமை பிற்பகல் முதல் இன்று அதிகாலை வரை படையினர் கடல்வழி தரையிறக்க முயற்சியையும், தரைவழி ஊடுருவல் முயற்சியையும் மேற்கொண்டிருந்தனர். படையினரின் இரு வழி முன்னகர்வுகளுக்கும் ஆதரவாக படையினரின் பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலறி எறிகணைகள், மோட்டார் எறிகணைகள், டாங்கி எறிகணைகள், நெடுந்தூர கனோன் பீரங்கிகள், நெடுந்தூரத் துப்பாக்கிச் சூடுஇ கடல்வழி பீரங்கித் தாக்குதல்கள், எம்.ஜ-24 உலங்கு வானூர்தி வெடிகணைத் தாக்குதல்கள் நடத்தின. இதன்போது கடல்வழி தரையிறக்க முயற்சிகளை கடற்புலிகள் முறியடித்துள்ளனர். இதபோன்று தரைவழி முன்னகர்வுகளை விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் முறியடித்துள்ளன.
 

 


0 comments:
Post a Comment