தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » வெற்றிக்களிப்பில் சிங்களவர்கள்!! நாடு திரும்பிய ஜனாதிபதி மண்ணை முத்தமிட்டார்!!

வெற்றிக்களிப்பில் சிங்களவர்கள்!! நாடு திரும்பிய ஜனாதிபதி மண்ணை முத்தமிட்டார்!!

Written By paadumeen on Sunday, May 17, 2009 | 7:18 AM

ஜீ11 மகாநாட்டுக்குச் சென்றிருந்த ஜனா திபதி இன்று காலை நாடுதிரும்பி யுள்ளார்.30 வருடங்களாக நீடித்த இனப் பிரச்சனைக்கு தீர்வுகண்டு விட்டதாக வும்.விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டதாகவும் இன்று அரசாங் கம் அறிவித்துள்ளது. இதேவேளை இலங்கைநேரம் இன்று காலை 7.30 மணியளவில் சிறிலங்கா எயார்லைன்சில் நாடுதிரும்பிய ஜனாதிபதிக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்ட துடன் நூற்றுக்கணக்கான சிங்கள மக்கள் கையில் சிங்கக்கொடிகளுடன் வரவேற்றனர். விமானத்திலிருந்து இறங்கிய ஜனாதிபதி விழுந்து மண்ணை முத்தமிட்டதைத் தொடர்ந்து பெருமளவான சிங்கள மக்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் அவரது கையில் சிங்கக்கொடியையும், பொளத்த சமயக் கொடியையும் கொ டுத்து வாழ்த்துத் தெரிவித்தனர். பௌசியும், டக்ளஸ்தேவானந்தாவும் ஜனாதிபதியை கட்டிப் பிடித்து முத் தமிட்டனர். நாட்டுமக்கள் தமது வீடு களில் சிங்கக்கொடிகளைப் பறக்க விட்டு வெற்றி விழாவை கொண்டா டும்படி அரசாங்கம் நாட்டுமக்களை கேட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பிரதேசங் களை முழுமையாக மீட்டெடுத்ததை பெரும் விழாவாகக் கொண்டாட அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வெற்றி விழா வை கொழும்பு உட்பட இலங்கை முழுவதும் வாழும் தமிழ் மக்கள் பெரும் வெற்றி விழாவாகக் கொண்டாடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் சிங்களக் காடையர்கள் வெடி கொழுத்துவதற்கு பணம் தரவேண்டும் என வலியுறுத்தி பணத்தினை வாங்கிச் செல்வதுடன் விடுதலைப்புலிகள் அழிந்துவிட்டனர் என கேலியும் கிண்ட லும் செய்கின்றனர். அத்துடன் சிறிலங்காவின் தேசிய கொ டியை நாளை வர்த்தக நிலையங்களில் பறக்கவிட்டு வெற் றியைக் கொண்டாடவேண்டும் எனவும் எச்சரித்து விட்டு சென்றுள்ளனர்.
இதேவேளை யாழ்குடாவில் துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பியினரும் கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் துணைஇராணுவக் குழுவினரும் இந்த வெற்றி விழாவினை தமிழ் மக்கள் கொண்டாட வேண்டும் என வலியுறுத்தி வருவதுடன் கொண்டாட தவறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment