தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » பல்லாயிரக்கணக்கான மக்கள் சாட்சியின்றி இனப் படுகொலை செய்யப்படலாம் என இறுதி எச்சரிக்கை!!

பல்லாயிரக்கணக்கான மக்கள் சாட்சியின்றி இனப் படுகொலை செய்யப்படலாம் என இறுதி எச்சரிக்கை!!

Written By paadumeen on Sunday, May 17, 2009 | 9:55 PM

வன்னியில் கடுமையான தாக்குத ல்களை நடத்தி எஞ்சியுள்ள மக்களை சாட்சியின்றி துடைத் தழிக்கும் நடவடிக்கையை படையி னர் ஆரம்பித்துள்ளதாக சற்று முன்னர் வன்னியில் இருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது.
இதனைத் தடுப்புதற்கு அனைத்துலக சமூகம் எந்தவித கால தாமதமும் இன்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புலம்பெயர்ந்த மக்கள் வீதிகளில் இறங்கி அனைத்துலகுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் இறுதியாகக் கேட்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் பகுதியை முற்றாகக் கைப்பற்றி இருப்பதாகப் பரப்புரை மேற்கொண்டுவரும் சிறீலங்கா அரசுஇ அந்தப் பகுதியில் எஞ்சியிருந்தவர்கள் சரணடைய அவகாசம் வழங்காது பாரிய இன அழிப்பை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். இதற்கான தாக்குதல்கள் நாலாபுறமும் இருந்து மேற்கொள்ளப்படு வருகின்றன.
இதனைத் தடுப்பதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் கால தாமதம் அடைந்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் சாட்சியின்றி இனப் படுகொலை செய்யப்படலாம் என இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment