 அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்தில் தங்கியுள்ள 150.000 மேற்பட்ட பொதுமக்களை வெளியேறவிடாது மிகக்கடுமையான தாக்குத லினை தொடர்ந்து படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
 அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்தில் தங்கியுள்ள 150.000 மேற்பட்ட பொதுமக்களை வெளியேறவிடாது மிகக்கடுமையான தாக்குத லினை தொடர்ந்து படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.இது இவ்வாறு இருக்கையில் பாதுகாப்பு வலயத்தில் தற்போது பொதுமக்கள் இல்லை என்றும் அவர்கள் அனை வரும் வெளியேறிவிட்டதாக அரசு செய்தி வெளியிட் டுள்ளது. இதனைப் பார்க்கும் போது அங்கு தங்கியிருக்கும் மக்கள் அனைவரையும் கொன்றெழிப்பதுதான் அரசின் நோக்கமாக உள்ளது.
தற்போது புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் தங்கியிருக் கும் மக்கள் வெளியேறுவதற்கு எந்தவிதமான கட்டுப்பாடு களும் இல்லை என்றும் தங்களால் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறுவதற்கு எந்த வசதி யினையும் அல்லது எந்த வாய்ப்புக்களையும் வழங்காது அரசு மிகக்கடுமையான தாக்குதலினை தொடர்ந்து நடாத் திக்கொண்டு இருப்பதாக தெரியவருகின்றது.
தற்போது வன்னிப்பகுதியில் மிகவும் வேதனை தரும் அளவுக்கு மனிதப்பேரவலம் நிகழ்ந்து கொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும்தகவல்கள் உறுதிசெய்கின்றன.
 

 


0 comments:
Post a Comment