தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » விடுதலைப் புலிகள் இறந்த பின்னரும் அவர்களைக் காட்டிக் கொடுத்த 'பெருமை'யைப் பெற்றுள்ளார் கருணா!!

விடுதலைப் புலிகள் இறந்த பின்னரும் அவர்களைக் காட்டிக் கொடுத்த 'பெருமை'யைப் பெற்றுள்ளார் கருணா!!

Written By paadumeen on Tuesday, May 19, 2009 | 3:45 PM

விடுதலைப் புலிகள் இறந்தபின் அவர்களை காட்டிக் கொடுத்த 'பெருமையைப் பெற்றுள்ளார் கருணா!!
விடுதலைப் புலிகள் இயக்கத்தினரின் உடல்களை புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி அரசுப் படைகளுக்கு ஆதரவாக மாறி புலிகள் வலு விழக்க முக்கிய காரணமாக இருந்த கருணாதான் அடையாளம் காட்டியுள்ளார்.

இதன் மூலம் புலிகளின் இறந்த உடல்களையும் காட்டிக் கொடுத்தவர் என்ற 'பெருமை' அவருக்குப் போய்ச் சேர்ந்துள்ளது. விடுதலைப் புலிகள் குறித்து இலங்கை ராணுவத்திடம் முழுமையான தகவல்கள் இல்லை. முன்னாள் புலிகள் இயக்கத்தினரை வைத்துத்தான் பிடிபட்டவர்களையும் கொல்லப்பட்ட வர்களையும் அவர்கள் அடையாளம் கண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை நடந்த சண்டையில் நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகளைக் கொன்றதாக ராணுவம் அறிவித்தது. இந்த சண்டையின் போது பிரபாகரன் அவரது மகன் சார்லஸ் அந்தணி உள்ளிட்டோரும் கொல்லப் பட்டதாக அது கூறியது. இவர்களில் பிரபாகரன் இறந்தது குறித்து குழப்பச் செய்திகளை வெளியிட்டது இலங்கை ராணுவம் .

இந் நிலையில் நேற்று கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தினரின் உடல்களை அடையாளம் காணும் பணியில் கருணாவை ஈடுபடுத்தியுள்ளது இலங்கை ராணுவம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கருணா ஒவ்வொரு உடலையும் அடையாளம் காட்டி அது யார் என்ன என்ற விவரத்தை ராணுவத்திற்குத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் விடுதலைப் புலிகள் இறந்த பின்னரும் அவர்களைக் காட்டிக் கொடுத்த 'பெருமை'யைப் பெற்றுள்ளார் கருணா

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment