தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » உயிராபத்துகளுக்கு மத்தியில் பணியாற்றிய இரு வைத்தியர்களுக்கு ஐநாவின் அமைதி பரிசு!!

உயிராபத்துகளுக்கு மத்தியில் பணியாற்றிய இரு வைத்தியர்களுக்கு ஐநாவின் அமைதி பரிசு!!

Written By paadumeen on Saturday, May 16, 2009 | 10:24 AM

முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களிலும் முல்லைத்தீவின் பாதுகாப்பு வலயப்பகுதியிலும் உயிராபத்துகளுக்கு மத்தியில் மனித நேயத்துடன் பணியாற்றிய இரண்டு வைத்திய அதிகாரிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி பரிசு வழங்கப்படவுள்ளதாகவும் இதற்கான சிபாரிசை கொழும்பில் உள்ள ஐநா அலுவலகம் செய்திருப்பதாகவும் அந்த நிறுவனத்தின் கொழும்பு பேச்சாளர் கோடன் வைஸ் தெரிவித்துள்ளார்.
கடுமையான சவால்கள் நிறைந்த காலத்தில் மிகவும் துணிச்சலோடு தனிமையில் கடமையாற்றிய கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரீ.சத்தியமூர்த்தி மற்றும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரீ.வரதராஜா ஆகியோரே இவ்வாறு ஐநாவின் அமைதி பரிசுக்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ளார்கள்.
மருந்துகள் மற்றும் வைத்தியசாலைகளுக்குரிய வசதிகள் அற்ற நிலையில் இவர்கள் போர்க்காயங்களுக்கு உள்ளாகியவர்களுக்கு வைத்திய சேவை வழங்கியுள்ளார்கள். இவர்களது சேவை பாராட்டப்பட வேண்டியது என பிபிசிக்கு கருத்து தெரிவித்த ஐநாவின் பேச்சாளராகிய கோடன் வைஸ் இந்த விருதுக்காக இவர்கள் இருவரது பெயர்களையும் தாங்கள் பெப்ரவரி மாதத்திலேயே சிபாரிசு செய்திருந்ததாகக் கூறியுள்ளார் .

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment