தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » 13 ப்ளஸ் நடைமுறைப்படுத்தப்பட்டாலே அதிகாரப்பகிர்வு குறித்து பேசமுடியும்!

13 ப்ளஸ் நடைமுறைப்படுத்தப்பட்டாலே அதிகாரப்பகிர்வு குறித்து பேசமுடியும்!

Written By paadumeen on Saturday, February 4, 2012 | 1:39 PM

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நடை முறைப்படுத்தப்பட்ட பின்னரே அதற்கு அப்பால் அதிகாரப்பகிர்வு குறித்து பேச்சு வார்த்தைகளில் முனைப்புக் காட்ட முடி யும் என்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. 13 ஆவது அரசியல மைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத் துவதற்காக வேறெந்த கட்சியுடனும் அர சாங்கம் பேச்சுவார்த்ததை நடத்துவதற்கு தேவையில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் அரசியலமைப்பில் சட்டமாக உள்வாங்கப்பட்டுள் ளதால் பேச்சுவார்த்தைகள் மூலம் அதற்குக் காலத்தைக் கடத்துவது தேவையற்ற தாகும் என்றும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சருடனும் ஜனாதிபதி இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குறிப் பிடுகின்றது. பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்தளித்தல் , காணி மற்றும் மாகாண சபைகளை இணைத்தல் முறைமை ஆகிய விடயங்கள் இந்த அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு கூறியுள்ளது.
இதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி ஏற்கனவே கூறியுள்ள நிலையில் அதனை அவ்வாறே நடைமுறைப்படுத்த வேண்டியுள்ள தாகவும் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது. 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரே அதற்கு அப்பால் அதிகாரப்பகிர்வு குறித்து பேச்சுவார்த்தைகளில் முனைப்புக் காட்ட முடியும் என்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment