
நவகமுவ பிரதேசத்தின் களனி கங்கை யில் உராய்வு நீக்கி எண்ணெய் கலக்கப் பட்டுள்ளதாக சூழலியலாளர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர். இதன்காரணமாக கங் கையின் நீர் கடும் மாசடைவுக்கு உள்ளாகி யிருப்பதாக சூழலியலாளர் ரவீந்திர காரி யவசம் குறிப்பிடுகின்றார். இது தொடர் பாக அதிகாரிகளை தெளிவுபடுத்தியுள்ள போதிலும் இதுவரை எவ்வித நடவடிக் கையும் மேற்கொள்ளப்படவில்லை என் றும் அவர் குற்றுஞ்சாட்டியுள்ளார்.
எனினும் மத்திய சுற்றாடல் அதிகார சபை யின் தலைவர் கலாநிதி சரித ஹேரத் திடம் இந்த விடயம் குறித்து வினவப்பட்டபோது, அதுகுறித்து தமக்கு எவ்வித முறைப்பாடும் கிடைக்கவில்லை என கூறினார். எவ்வாறாயினும் கங்கையில் உராய்வு நீக்கி எண்ணெய் கலக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து தாம் ஆராய்ந்து பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 

 


0 comments:
Post a Comment