
நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலை களில் தண்டப்பணம் செலுத்த முடியாது சிறைத் தண்டணை அனுபவித்து வரும் கைதிகள் இன்றைய தினம் விடுதலை செய்யப்படுகின்றனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு இவர்களை விடுதலை செய் வதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பி.டபிள்யூ.கொடிப்பிலி தெரிவித் தார். எனினும் சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட 27 குற்றச் செயல்களை புரிந்த தன் நிமித்தம் தண்டனை பெறும் சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை சரத் பொன்சேகாவின் விடுதலை குறித்த எந்தவித அறிவுறுத்தல் களும் இதுவரை தனக்கு கிடைக்கப் பெறவில்லை எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment