
டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கட லில் மூழ்கியதன் நினைவுநாள் அன்று மெழுகுவர்த்தி ஏந்தி மக்கள் ஊர்வல மாகச் செல்கின்றனர். மறுநாள் சர்வ சமயப் பிரார்த்தனை நடத்தப்படுகிறது.
இந்த நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் ஹேலி பாக்சில் வந்து சேருமாறு கனடாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் பெர்சி பாரி ஸ் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்த ஊர்வலம் நகரின் டைட்டானிக் தொடர்பான இடங்களைக் கடந்து ஹேலி பாக்ஸ் சிட்டி ஹாலுக்கு முன்பு உள்ள பெரிய மைதானத்தை வந்தடையும்.

நினைவு நாள் பேருரைகள் ஆற்றிய பின்பு பல நிகழ்ச்சிகள் நடைபெறும். இதன்பிறகு நள்ளிரவு 12.20 மணிக்கு கப்பல் விபத்தில் இறந்தவருக்கு மௌ ன அஞ்சலி செலுத்தும் வகையில் அமைதி காக்கப்படும் அப்போது தேவா ல ய த் தில் மணிகள் ஒலிக்கும்.
ஏப்ரல் 15ம் திகதி அன்று மாலை மூன்று மணியளவில் பேர்வியூ கல்லறைத் தோ ட் ட த் தில் உள்ள புல்வெளியில் இசை நிகழ்ச்சி நடைபெறும். 120 பேருக்கு மேல் புதைக்கப்பட்ட இந்தக் கல்லறைத் தோட்டத்தில் இறந்து போனவர்க ளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மலர் வளையம் வைக்கப்படும்.
0 comments:
Post a Comment