தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » ஆப்கன் அரசுக்காக தலிபான்களுடன் அமெரிக்கா பேச்சு நடத்தக்கூடாது! - ஹமீத் கர்சாய்

ஆப்கன் அரசுக்காக தலிபான்களுடன் அமெரிக்கா பேச்சு நடத்தக்கூடாது! - ஹமீத் கர்சாய்

Written By paadumeen on Saturday, February 18, 2012 | 8:24 AM

ஆப்கன் அரசுக்காக தலிபான்களுடன் அமெரிக்கா பேச்சு நடத்தக்கூடாது என்று ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் திட்ட வட்டமாக தெரிவித் துள்ளார். தலிபான் களுடன் பேச்சு நடத்துவதற் காக இடத் தை த் தேர்வு செய்வது பேச்சுவார்த் தை யில் ஈடுபடுவது போன்றவற்றை அமெரிக் கா மேற்கொள்ளக்கூடாது என்றும் அவர் கூறி னார்.

பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண் டுள்ள ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் அந்நாட்டின் முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஈரான், ஆப்கன், பாகிஸ்தான் பங் கேற்கும் முத்தரப்பு மாநாட்டுக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி ஏற்பாடு செய்துள்ளார். மாநாட்டுக்கு இடையில் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கர்சாய் கூறியது: ஆப்கானிஸ் தானுக்காக தலிபான் இயக்கத்தினருடன் அமெரிக்கா பேச்சுவார்த் தை நடத்தக்கூடாது. தலிபான் இயக்கத்தினருடன் பேச்சு நடத்துவதற்கான இடத்தை அரசுதான் தேர்வு செய்யும் என்றார். தலி பான் இயக்கத் தலைவர் களுடன் துபை அல்லது துருக்கியில் பேச்சு நடத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதனிடையே ஆப்கனில் செயல்படும் தலிபான் அமைப்பினர் கத்தாரில் கடந்த வாரம் அலுவலகம் திறந்துள்ளனர். இந்த அலுவலகமே அமெரிக்காவின் பரிந்துரைப்படி திறக்கப்பட்டதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். வளைகுடா பிராந்தியத்தில் பேச்சு நடத்த வசதியாக இந்த அலுவலகம் திறக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தான் வந்திறங்கும் முன்பாக அமெரிக்க செய்தி பத்திரிகைக்கு கர்சாய் அளித்த பேட்டியில் தலிபானுடன் சேர்ந்து பேச்சுவார்த்தையில் தமது அரசு ஈடுபட்டுள்ளதாகக் கூறினார். ஆனால் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று உடனடியாக தலிபான்கள் மறுத்துவிட்டனர். ஆப்கனில் அதிகாரம் இல் லாத அரசுடன் பேச்சு நடத்தத் தாங்கள் தயாராக இல்லை தலிபான் அமைப் பின் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் தெரிவித்தார்.

ஆப்கன் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்க பாகிஸ்தான் முன்வந்தது குறித் து கர்சாயிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு இத்தகைய ஒத்துழைப்பை தனது அரசு வரவேற்பதாக அவர் கூறி னார். இருப்பினும் இரு தரப்பிலும் நம்பிக்கை யை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டி யுள்ளார்.

ஆப்கன் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது என்ற பாகிஸ்தானின் முடிவை முன்னர் ஆப்கன் அரசு ஏற்கவில்லை. சோவியத் நாடு துண்டானபோது ஏற்பட்ட நிலைமை மீண்டும் உருவாவதை தான் விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேட்டோ கூட்டுப் படையினருக்குத் தேவையான எரிபொருள் சப்ளைக்கான தடைகளை அகற்றுமாறு பாகிஸ்தான் அரசை கர்சாய் கேட்டுக் கொண்டார்.

கடந்த ஆண்டு நவம்பரில் கூட்டுப் படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 24 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இதையடுத்து நேட்டோ படைகளுக்கான எரிபொருள் சப்ளையை பாகிஸ்தான் நிறுத்தியது. இருப் பினும் அழுகும் பொருள்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ் தான் பாதுகாப்பு அமைச்சர் செüத்ரி அகமத் முக்தார் தெரிவித்தார்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment