Home »
Accident
» சிலாபத்தில் இரு லொறிகள் மோதி விபத்து - ஒருவர் பலி, இருவர் படுகாயம்
சிலாபத்தில் இரு லொறிகள் மோதி விபத்து - ஒருவர் பலி, இருவர் படுகாயம்
சிலாபம் - புத்தளம் பிரதான வீதியின் ஆராச்சிக் கட்டு பிரதேசத்தில் ஒரே திசையில் பயணித்த இரு லொறிகள் மோதுண்டு ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு இருவர் படுகாய மடைந் துள்ளனர். இவ்விபத்து இன்று அதிகாலை 4 மணி யளவில் இடம்பெற்றதாக சிலாபம் பொலிஸார் தெரிவித் தனர். புத்தளம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இரு லொறிகளே இவ்வாறு மோதி விபத்துக் குள்ளாகியுள்ளன. விபத்தில் ஒரு லொறி யின் சாரதி பலியானதோடு காயமடைந்த இருவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். இவ்விபத்து குறித்து சிலாபம் பொலி ஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment