
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மூதூர் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அதிகாரியொருவர் முதலீட்டுச் சபையால் கொழும்புக்கு அழைக்கப் பட்டுச் சம்பூர் பிரதேசம் தொடர்பாகவும் அதன் வரைபடம் தொடர்பாகவும் ஆராயப்பட் டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய நிறுவனம் ஒன்று தொழில் பேட்டை அமைப்பதற்காக 4மில்லியன் அமரிக்க டொலரை முதற்கட்டமாக செலவிடவுள்ளதாகவும் தெரிகிறது. சம்பூர் அனல் மின் நிலையம் தவிர்ந்த ஏனைய பகுதியில் மக்களைக் குடியமர்த்தத் தயார் என அரசாங்கத்தால் அறிவித்த பின்னரும்கூட இடம்பெயர்ந்த மக்களின் வாழ்விடங்கள் பறிக்கப்படுவதற்கான தொடர் நடவடிக்கைகள் அரசால் மேற் கொள்ளப்படுவது குறித்து இப்பிரதேச மக்கள் மிகுந்த வேதனையும் விரக்தியும் அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதலீடு என்ற போர்வையில் சம்பூர் அனல் மின் நிலையம் தவிர்ந்த எனைய பகுதிகளையும் சுவிகரிக்க திரைமறைவில் முயற்சிகள் நடைபெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டு திருகோணமலை நகரசபை உறுப்பினரான சி.நந்தகுமார் கடிதமொன்றை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் ஆனால் இதுவரை கூட்டமைப்பு தலைவரிடமிருந்து எவ்வகையான பதிலும் வழங்கப்படவில்லை யென நகரசபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பறிபோகவிருக்கின்ற மீதமிருக்கிற நிலத்தையும் மீட்டுத் தருமாறு இப்பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். மக்களின் நலனுக்காக குரல்கொடுப்ப வர்கள் தயவுசெய்து இம்மக்களுடைய பிரச்சனையை கருத்திற் கொண்டு சுமூ கமான முறையில் தீர்ப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முன்வரவேண்டும். செய்வார்களா?
0 comments:
Post a Comment