தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » அதிகரிக்கும் விலையேற்றம்! அடுத்து பால்மா?

அதிகரிக்கும் விலையேற்றம்! அடுத்து பால்மா?

Written By paadumeen on Saturday, February 18, 2012 | 2:46 PM

எரிபொருள் விலை ஏற்றத்தினைத் தொடர்ந்து பால்மாவின் விலைகளை அதிகரிப்பதற்கு அரசாங்கத்தி டம் பால்மா விநி யோக நிறுவனங்கள் அனுமதி கோரியுள்ளன. பால்மாவினை விநியோகிக்கும் நிறுவனங்கள் இறக்குமதி மற்றும் போக்குவரத் துச் செலவுகள் என்பவற்றினை காரணம் காட்டி இப் பால் மாவின் விலை உயர்வினைக் கோரிவுள்ளதாக நுகர்வேர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அங்கர், நெஸ்பிறே, மெலிபன், டயமன்ட் முதலான வர்த்தக பெயர்களைக் கொண்ட பால்மாவை நிறு வனங்களே இணைந்து இவ் விலை அதிகரிப்பினை கோரியுள்ளது. அதிகரிப்பினை வர்த்தகக் துறை அமைச்சரிடம் கோரியுள்ளது. பால்மாக்களின் விலையானது அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டால் 400 கிராம் பால்மாவின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்க வாய்ப்புள் ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக் காலமாக இலங்கையின் எரிபொருள் விலை ஏற்றத் தினால் மக்களு டைய அத்தியவசியப் பொருட்கள் மற்றும் மின்சார கட்டணங்களுடன் கூடிய எரிபொருள் கட்டணம், போக்குவரத்துக் கட்டணங்கள், நீர்க்கட்டணங்கள் போன்றன அதிகரிக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் கட்டண உயர்சியினால் நாட்டில் மக்கள் தொடர்ச்சியாக அரசியற் கட்சிகளும் மக்களுன் இணைந்து அரசிற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் ஈடுபட்டு வருகின்றமை பாரிய பிரச்சனையாக உள்ளது.

அரசியற் கட்சிகள் வரிசையில் ஜனநாயக மக்கள் முன்னனி, ஜக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இடது சாரி முன்னனி போன்ற கட்சிகள் நேற்றைய தினம் கொழும்பு புறக் கோட்டையில் மாபெரும் ஆர்பாட் டத்தினை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜே.வி.பியின ரும் பல்வேறு போராட்டங்களையும் துண்டுப் பிரசுர நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்ற மையும் குறிப்பிடத்தக்கது.

மக்களும் தொடர்ந்து எரிபொருள் விலை ஏற்றத்தினை கண்டித்து ஆர்பாட்டங் களில் தொழில் பகிஸ்கரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் சிலாபம் பகுதியில் மீனவர்கள் மேற்கொண்ட ஆர்பட்டத்தின் போது ஒருவர் கொல்லப்பட்டமையும் பலர் காயமடைந்துள்ளமை யும் குறிப்பிடத்தக்கது. மலையக தோட்டப் பகுதிகளிலும் மக்கள் வேலை பகிஸ்கரிப்பிலும் ஈடுபட் டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment