தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » ரொபேட் ஓ பிளேக் இலங்கை விஜயம்

ரொபேட் ஓ பிளேக் இலங்கை விஜயம்

Written By paadumeen on Sunday, February 12, 2012 | 10:46 AM

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத் துணைச் செயலர் மரியா ஒட்டேரோ மற்றும் உதவி இராஜாங்க செயலர் ரொபேட் ஓ பிளேக் ஆகியோர் இலங்கை வந்துள்ளனர்.  நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை இவர்கள் வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
 இலங்கை வந்துள்ள இவர்கள் இன்று (12) மாலை முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இந்த சந்திப்பானது இன்று மாலை 04.45 அளவில் கொழும்பில்இடம்பெறவுள்ளது.  இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.  இந்த சந்திப்பின் போது இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை அரசியல் தீர்வு பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment