தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » இலங்கை மீனவர்கள் ஐவர் இந்தியாவில் விடுவிப்பு

இலங்கை மீனவர்கள் ஐவர் இந்தியாவில் விடுவிப்பு

Written By paadumeen on Sunday, February 12, 2012 | 10:33 AM

புதுச்சேரியில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள்இ இலங்கை தூதரிடம் ஒப்படைக்கப்பட்டனர். விடுதலையின் போது அவர்களுக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் கடற்கரையில் கடந்த டிசம்பர் மாதம் 14-ம் திகதிஇ இந்திய எல்லையில் மீன் பிடித்தகாரணத்தால் இந்திய கடலோர படையால் இலங்கை மீனவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டனர்.

பின்பு அவர்கள் புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு வழக்குப்பதிவு செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின் சிறை வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து கைது செய்யப்பட்ட 5 இலங்கை மீனவர்களையும் விடுவித்து அவர்கள் மீதான வழக்கை வாபஸ் செய்யுமாறு புதுச்சேரி அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. இதனை அடுத்து புதுச்சேரி அரசின் உள்துறையானது அவர்கள் மீதான வழக்கை கடந்த ஜனவரி மாதம் 6-ம் திகதி வாபஸ் பெற்றது.

இதையடுத்து நீதிமன்ற ஒப்புதல் பெற்ற பின்னர் அனைவரும் கடந்த 2-ம் திகதி காலாப்பட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட ஐந்து இலங்கை மீனவர்களும் புதுச்சேரி மாவட்ட ஆளுநரின் உத்தரவின் பேரில் புதுச்சேரி தாலுக்கா தாசில்தார் பாதுகாப்பில் சோலைநகர் இளைஞர் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த தகவல் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இந்திய மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து அவர்களை மறுபடியும் இலங்கைக்கே அனுப்புவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் இலங்கை மீனவர்களை அழைத்து செல்வதற்காக இலங்கை துணை தூதரகத்தின் அதிகாரி விஜயசேகர நேற்று புதுச்சேரி சோலைநகருக்குச் சென்றிருந்தார்.

சோலைநகர் இளைஞர்விடுதியில் இலங்கை மீனவர்கள் 5 பேருக்கும் வழியனுப்பு நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி தாலுக்கா தாசில்தார் ரமேஷ் கலந்து கொண்டு இலங்கை மீனவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி வழியனுப்பி வைத்தார்.

பின்பு இலங்கை மீனவர்கள் அனைவரும் இலங்கை துணை தூதரக வாகனத்தில் சென்னை அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் இன்று (12) விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment