Home »
» லலித்குமார், குகன் ஆட்கொணர்வு வழக்கில் பிரதிவாதிகளுக்கு மீண்டும் அழைப்பாணை
லலித்குமார், குகன் ஆட்கொணர்வு வழக்கில் பிரதிவாதிகளுக்கு மீண்டும் அழைப்பாணை

யாழ்ப்பாணத்தில் காணாமல் போன மக்கள் போராட் ட அமைப்பின் உறுப்பினர்களான லலித் குமார் வீர ரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எதிரவரும் 29 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய பொலிஸ் மா அதிபர், யாழ் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி, மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, அச்சு வேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சட்டமா அதிபர் ஆகியோருக்கு நீதிமன்றம் மீண்டும் அழைப் பாணை விடுத்துள்ளது.
இவர்களை நேற்று நீதிமன்றில் ஆஜராகுமாறு ஏற் கனவே நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது. எனினும் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத் துக் கொள்ளப்பட்டபோது இவர்கள் பிரச்சன்னமாகி யிருக்கவில்லை. அதையடுத்து வழக்கை 29 ஆம் தி கதிக்கு ஒத்திவைத் நீதிபதி நளின் பெரேரா பிரதி வாதிகளை அன்றைய தினம் ஆஜராகுமாறு உத்தர விட்டார்.
(எஸ்.எஸ்.செல்வநாயகம்)
0 comments:
Post a Comment